- ஒன்றை உன்னிடம் சொல்ல எண்ணிற்று :
- நீ ஒருநீளத் திரைப்படம் எழுதுவோன்
- நீயே எண்ணி நீயே எழுதுக!
- உள்ளமதனை உறுதியால் தோண்டினால்
- வெள்ளப் புதுக்கருத்து விரைந்து பாயும்.
- அயலார் பாட்டின் அடியைத் தொடாதே
- அயலார் பாட்டின் சில சொல் அகற்றி
- உன் பாட்டென்றே உரைக்கவேண்டாம்
- பிறரின் கருத்தைப் பெயர்த்தெழுதாதே
- பிறரின் பேச்சின் சொல் தொட்டே வேண்டாம்
- அடியைத் திருடிச் சொல்லைத் திருடிப்
- படிந்த வழக்கம் அயலார் படைத்த
- நூலையே திருடும் நோயும் ஆனதே!
- அதனால் அயலார் தமிழகத்தை
- மதியார் அன்றோ?பொங்கல்
- புதுநாள் போற்றடா!வாழ்த்தடா மகிழ்ந்தே!