ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில்உருவாகி வரும் இந்தியன் 2 படத்தின் முதல் கட்ட காட்சிகள் சென்னையில் படமாக்கப்பட்ட நிலையில், அடுத்தகட்டபடப்பிடிப்பு , குஜராத் மற்றும் குவாலியரில் நடந்தது. இங்கு பிரம்மாண்டமான சண்டைக் காட்சிகள் குதிரை சவாரி காட்சிகள்ரூ. 40 கோடி செலவில் எடுக்கப்பட்ட அந்த காட்சியில் சுமார் 2,000 துணை நடிகர்கள் நடித்தனர். இதையடுத்து அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடக்கவுள்ளதாக கூறப்படுகிறது.இதற்காக சென்னையில் முக்கிய பகுதியில் பிரமாண்ட அரங்குகள் அமைக்கப்பட்டு வருகிறது. தனது வீட்டில் மாடிப்படியில் தவறிவிழுந்ததில் ஏற்பட்ட விபத்து காரணமாக, கமல்ஹாசன் காலில் முறிவு ஏற்பட்டு அவருக்கு காலில் பொறுத்தப்பட்டிருந்த பிளாட்டினம் ராடை நீக்கும் அறுவை சிகிச்சைக்காக கமல்ஹாசன் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்ட காரணத்தினால், இப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில், தற்போது பிப்ரவரி முதல் வாரத்தில்மீண்டும் முழுவேகத்தில் தொடங்கப்படவுள்ளது.