ரஜினிகாந்த்துக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கை வருமான வரித் துறை இன்று ) திடீரென வாபஸ் பெற்றுள்ளது. கடந்த 2002 ஆம் ஆண்டு முதல் 2005 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் ரஜினிகாந்த் , வருமான வரியை முறையாகக் கட்டவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக, ரூ 66.22 லட்சம் அபராதம் விதித்து ரஜினிக்கு அமலாக்கத் துறை ரஜினிக்கு நோட்டீஸ் அனுப்பியது.
இந்த நோட்டீசை எதிர்த்து ரஜினிகாந்த், வருமான வரித் துறை மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தில் முறையிட்டார். அந்த வழக்கில், அமலாக்கத் துறையின் நோட்டீஸை ரத்து செய்து உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.தீர்ப்பாயத்தின் இந்த உத்தரவை எதிர்த்து, 2014 ஆம் ஆண்டில் வருமான வரித் துறை, சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது.
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் சுரேஷ் குமார் அமர்வில் நடைபெற்று வந்தது.கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வந்த வருமான வரித் துறை, வழக்கை வாபஸ் பெறுவதாக இன்று உயர் நீதிமன்றத்தில் திடீரென அறிவித்தது. நடிகர் ரஜினிகாந்துக்கு விதிக்கப்பட்ட அபராதம் ஒரு கோடி ரூபாய்க்கும் குறைவு என்பதால், இந்த வழக்கை வாபஸ் பெறுவதாக, வருமான வரித் துறை தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, வருமான வரித் துறையின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.