சூர்யாவைத் தொடர்ந்து சமந்தாவும்….!


தமிழ்,மற்றும்  தெலுங்கு  மொழிகளில்  முன்னணி நடிகையாக வலம் வருகிறார் நடிகை சமந்தா. சமந்தா சமூக அக்கறையிலும் அதிக ஈடுபாடு காட்டிவருகிறார்.இந்நிலையில், கடந்த 2012ம் ஆண்டு அவர் தொடங்கிய ‘பிரத்யுஷா’ என்ஜிஓ என்ற அமைப்பின் மூலம்   குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் தேவையான மருத்துவ உதவிகளை செய்து வருகிறார்.

 

கடந்த 2018ம் ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை சந்தித்து  சமந்தா அவர்களுடன் கிறிஸ்துமஸ் பண்டிகையையும் கொண்டாடினார்.அவர்களுக்கு விதவிதமான பரிசுகளையும் கொடுத்து அசத்தினார். இந்நிலையில்,அகரம் அறக்கட்டளை தொடங்கி ஏழை மாணவர்களுக்கு உதவி வரும் நடிகர் சூர்யாவைப்  போல நடிகை சமந்தாவும் கல்விச் சேவையில் அடியெடுத்துவைத்துள்ளார்.

 

தனது நண்பர்களான ஷில்பா மற்றும் முக்தா ஆகியோருடன் இணைந்து, ப்ரீ-ஸ்கூல் கல்வி நிறுவனத்தை தொடங்கியுள்ளார்.ஐதராபாத்தில் உள்ள ஜூபிளி ஹில்ஸில் சமந்தா தொடங்கியுள்ள ‘ஏகம்’ கல்வி நிறுவனம் குறித்து  அறிந்த சமந்தா ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து  வருகின்றனர்.