
விடிந்தால் காதலர் தினம்.
பிப் 14. காதலர்களுக்கு இனிய நாள்.இன்ப நாள் .
காதலர்கள் தங்களது அனுபவங்களை ,அவஸ்தைகளை நினைவு கூர்தல் அன்றைய நாளின் நிகழ்வாக இருக்கக்கூடும்.
கடற்கரை சினிமா தியேட்டர்களில் தங்களை மறுப்பார்கள்.
அன்றைய நாளில் மட்டும் அவர்களின் இதழ்களில் அமிர்தம் சுரக்கிறது. உதடுகள் கன்றிப்போனாலும் கவலைப்படுவதில்லை. மாந்தி மாந்தி பருகுவார்கள்.
காதல் மணம் புரிந்தவர்க்கும் நாளைய தினம் நல் தினமே!
ஒரு சிலர் தங்களின் ஏமாற்றங்களை நினைத்து கதறுவதும் உண்டு.
அப்படி கண்ணீர் வடிப்பவர்களில் பாலிவுட் நடிகை ஷனா கானும் ஒருவர்.
டான்ஸ் மாஸ்டர் மெல்வின் லூயிஸ் என்பவரை காதலித்தார்.
அவர் 5தன்னை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார் என்பது ஓராண்டு அனுபவத்துக்குப் பின்னர் தெரிந்திருக்கிறது.
“என்னுடைய லவ்வர் ஒரு மோசடிப்பேர்வழி என்பது ஒரு வருடம் கழித்துத்தான் தெரிந்தது. என்னுடன் தொடர்பில் இருந்து கொண்டே மற்ற பெண்களுடனும் தொடர்பில் இருந்திருக்கிறார். பொய்யர்.புகழ் பெறுவதற்காக எதையும் செய்யக்கூடியவர் “என்று சொல்லி கலங்கி இருக்கிறார் ஷனா கான் .












