பட்டாஸ் படத்தில் நடித்தவர் மெஹரீன் பிர்ஜாடா .
தெலுங்கு படங்களிலும் நடித்திருக்கிற இவர் தமிழில் ‘நெஞ்சில் துணிவிருந்தால் ,நோட்டா ,’ஆகிய படங்களிலும் நடித்திருக்கிறார்.
தெலுங்கு படமான அஸ்வத்தாமா வில் நாயகியாக நாக சவுரியாவுடன் நடித்திருக்கிறார். கடந்த மாதம்அந்தப்படம் வெளியாகியது .பார்க் ஹயாத்தில் இவருக்கு தனி அறை .
போகிறபோக்கில் புழுதியை வாரி தூற்றுவதை போல சில புகார்களை ஒரு ஆங்கில பத்திரிகையில் சொல்லியிருந்தார்.
“ஹோட்டல் வாடகை ,மற்றும் லாண்டரி பில் 1.37 லட்சம் , சாப்பாடு பில் 1.40 லட்சம் ஆகியவைகளை தயாரிப்பாளர் செட்டில் செய்யவில்லை” என்பதாக அதில் கூறப்பட்டிருந்தது.
“10 லட்சம் ரூபாயை மட்டும் பிடித்து வைத்துக்கொண்டு மீதமுள்ள மொத்த சம்பளமும் (65 லட்சம் ) ஹோட்டல் வாடகை மற்றும் இதர செலவுகளை செட்டில் செய்து விட்டார்கள். படத்தின் புரமோஷன்களுக்கு வந்த பிறகு அந்த 10 லட்சம் ரூபாய் கொடுப்பதாக இருந்தார்கள்..ஆனால் ஒவ்வொரு தடவையும் புரமோஷன்களுக்கு வராமல் ஏதாவது ஒரு காரணத்தை மெஹரீன் சொல்லி வந்தார். இதனால் தயாரிப்பாளருக்கும் நடிகைக்கும் பிரச்னை.இதை வைத்துக்கொண்டு தவறான தகவலை பரப்பி வந்திருக்கிறார் நடிகை.
அந்த ஹோட்டலில் ஒரு வேளை சாப்பாடு ரூ 7500, ஒரு நாள் லாண்டரி செலவு 27000 ஆயிரம். மெஹரீனின் பெர்சனல் காஸ்டியூம் டிசைனருக்கு 5.40 லட்சம் என செலவாகி இருக்கிறது. “என்பதாக தயாரிப்பு தரப்பு தகவல் தந்துள்ளது.