சீனாவின் நன்கொடையான கொரானா வைரஸ் பாதிப்பினால் உலகத்தின் பெரும்பாலான நாடுகள் பீதியில் உறைந்து போய் இருக்கின்றன. இதற்குரிய முழுப்பொறுப்பும் சீனாவுக்கே.!
அதன் பாதிப்பு இந்தியாவிலும் இருக்கிறது.
ஒரு காலத்தில் பிளேக்,காலரா,இன்ப்ளூயன்சா போன்ற நோய்கள் அச்சுறுத்தியது. பேரிழப்புகள் ஏற்பட்டன.
அதைப்போல கொரானா வைரஸும் பேரிடரை ஏற்படுத்துமா என்கிற அச்சம் இருக்கிறது.
கிட்டத்தட்ட அவசரநிலை காலத்து எச்சரிக்கையைப் போல அரசுகள் செயல்பட வேண்டியதாக இருக்கிறது.
1720-ஆம் ஆண்டு பிளேக் நோய்க்கு பிரான்சில் மட்டும் 100000 பேர் இறந்தார்கள் .
1820-ஆம் ஆண்டு காலரா நோய்க்கு தாய்லாந்து ,இந்தோனேசியா,பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் பேரிழப்பு. ஜாவா தீவில் மட்டும் ஒரு லட்சம் பேர் மரணம் அடைந்தார்கள்.
இதன் பிறகு இன்ப்ளூயன்சா ,தற்போது கொரானா வைரஸ்.
கொரானாவைரஸ் காரணமாக தமிழகத்தின் கேரளா,கர்நாடக எல்லையோர மாவட்டங்களில் இருக்கிற தியேட்டர்களை மூடச்சொல்லி இருக்கிறது தமிழக அரசு.
மகாராராஷ்டிராவில் தியேட்டர்களை மூடியதால் பாலிவுட்டுக்கு 800 கோடி இழப்பு என கண்ணீர் வடிக்கிறார்கள் .
தமிழகத்தில் அவ்வளவாக பாதிப்பில்லை என்கிறார்கள் விநியோகஸ்தர்கள்.
பெரு முதலீட்டுப் படங்கள் எதுவும் திரையிடப்படவில்லை. கடந்த வெள்ளியன்று ரிலீஸ் ஆன படங்களின் வசூல் மிகவும் கம்மி. அதனால் பாதிப்பு பெரிய அளவில் இல்லை.
படப்பிடிப்புகளை நிறுத்தினால் மட்டுமே கடுமையாக தமிழ்ச்சினிமா பாதிக்கப்படும். சின்னத்திரைதான் மோசமான விளைவுகளை சந்திக்க வேண்டியதாக இருக்கும். ஆனால் இது தொடர்பாக குஷ்பு சுந்தரிடம் பேசியபோது “ஒரு சீரியல் எடுக்கப்படுகிறபோது கிட்டத்தட்ட 150 பேர் வரை நெருக்கமாக உழைக்க வேண்டியதாக இருக்கிறது. ஒருவருக்கு வந்தாலும் மற்ற அனைவருமே குவாரன்டைனில் இருக்க வேண்டியதாக இருக்கும்.இதனால் முன்னெச்சரிக்கை பாதுகாப்புடன்தான் ஷூட்டிங் நடக்கிறது.ஆனால் அரசு என்ன சொல்கிறதோ அதன்படி முடிவு இருக்கும்” என்கிறார். இதனால் டி .வி.நிகழ்ச்சிகள் மிகவும் பாதிக்கும்.