சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் நடந்த சந்திப்பில்செய்தியாளர்களிடம் தமிழ் பேரரசு கட்சி பொதுச்செயலாளர் வ.கௌதமன் பேசியதாவது,
“உலகம் முழுவதும் பரவி வரும் கொரனா வைரஸ் கவலை அளிக்கக்கூடியதாக இருக்கிறது
உலகத்தில் பல வல்லரசு நாடுகள் இருந்தாலும் அவைகள் சக்திமிக்க அணு ஆயுதங்கள் உருவாக்கினாலும் இயற்கைக்கு முன்னால் எல்லோரும் சமம் என்பதை உணர்த்தும் விதமாக இந்த வைரஸ் பரவி வருகிறது
நமது சித்தர்கள் எழுதிய சித்த மருத்துவ முறையை பயன்படுத்தி இதற்கு மருத்துவம் கண்டறியப்பட வேண்டும். அதற்காக சித்த மருத்துவம் பயின்ற மருத்துவர்களையும் பாரம்பரிய சித்த வைத்தியர்களையும் அழைத்து அவர்களுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தி மருத்துவமுறை கண்டறியப்பட வேண்டும். இதற்காக தமிழக அரசு குறிப்பிட்ட நிதியை ஒதுக்க வேண்டும்.கொரனோ வைரசுக்கு மருத்துவ முறை கண்டுபிடிக்கும் பட்சத்தில் உலகம் போற்றக் கூடியதாக தமிழ் மண் இருக்கும்.
கொரனோ வைரசை விட மிகப்பெரிய வைரஸ் இந்த நாட்டில் இருக்கிறது அது ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற துடிக்கும் கொடிய வைரஸ்.அந்த வகையில் தற்போது ரங்கராஜ்பாண்டே நடத்திய பாராட்டு விழாவில் நல்லகண்ணு அவர்களை அழைக்க, அந்த பாராட்டு விழாவின் சூழ்ச்சியை அறிந்து கொண்டு அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மாட்டேன் என்று அறிவித்தார். ஈஷா யோகா நிகழ்விற்கும் பாண்டேவின் இந்நிகழ்விற்கும் நிதியளித்தவர்கள் ஸ்டெர்லைட் வேதாந்தா நிறுவனம். இதனையெல்லாம் தெரிந்தே ரஜினிகாந்த் கலந்துகொண்டார்.
தமிழ் தேசிய தலைவர்கள் எல்லாம் ரஜினி கூறிய கருத்தை ஏற்றுக் கொண்டார்கள் என ரங்கராஜ்பாண்டே எப்படி சொல்ல முடியும்?
ரங்கராஜ்பாண்டே தூத்துக்குடியில் போராடிய மக்கள் இறப்பிற்கு காரணமானவர்களின் கைக்கூலியாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.
ரஜினிகாந்த் பேசும்போது, சோ தற்போது இல்லை அவரது இடத்தை ரங்கராஜ்பாண்டே பெற்றிருக்கிறார். அடுத்த முறை அவரது விழா நடத்தும்போது மிகப்பெரிய அளவில் இருக்க வேண்டும் என ரஜினிகாந்த் பேசுகிறார்.
பின்னர் பாண்டே பேசும்போது ரஜினிகாந்த் முதலமைச்சர் இல்லை என்றால் அதை நான் கூட ஏற்கமாட்டேன் என கூறுவதும் முறைமாமன் சத்தியராஜ் கவுண்டமணி மாதிரி மாறி மாறி புகழ்ந்து கொள்வது ஏன்?
தேர்தல் வியூகம் வகுத்து கொடுக்கும் பிரசாந்த் கிஷோர் தனது அண்ணன் தான் எனக்கூறுகிறார் ரங்கராஜ் பாண்டே. அப்படியானால் பாண்டேவும் கூலிக்கு மாரடிக்கின்ற கூட்டத்தை சேர்ந்தவரா?
தமிழ்நாடு மானமுள்ள தமிழர்கள் வாழக்கூடிய மண். எங்களை ஆள கூடியவர்கள் தகுதியற்றவர்களாக இருந்தாலும் மானம் உள்ளவர்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ரஜினிகாந்த் மராட்டியத்தை சேர்ந்தவர். பாண்டே பீகாரை சேர்ந்தவர். உங்கள் வேலைகளை மராட்டியத்திலோ, பீகாரிலோ வைத்துக்கொள்ளுங்கள். நீங்களெல்லாம் தமிழர்களுக்கு அறிவுரை சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.
தமிழர்கள் அறிவு மிகுந்தவர்கள், தமிழர்கள் தங்களை தாங்களே ஆளக் தகுதியுடைவர்கள் என்பதை எதிர்வரும் காலங்களில் நிரூபிப்போம். நீலிக்கண்ணீர் இங்கு எவருக்கும் தேவையில்லை என்பதை சம்மந்தப்பட்டவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.