சீனாவில் இன்னொரு வைரஸ் .! பலி 1.என்ன சாபம்யா ! நள்ளிரவிலிருந்து நடமாட தடை.

உலகமே எங்கே போய் ஒளிவது என இடம் தேடி வருகிறது. 

சீனாவின் துயரம் கொரானா இன்று 194 நாடுகளில் பரவி இருக்கிறது..16,520  ( காலை வரை .) உயிர்களை பலி கொண்டிருக்கிறது.

வீட்டை விட்டு வெளியே வராதே பூச்சாண்டி புடிச்சிட்டு போயிடுவான் என பாலகர்களை பயமுறுத்துவது மாதிரி ஆகிப்போச்சு,இன்றைய உலக நிலவரம்.!

 ஒரு மணி நேரத்துக்கு முன்பிருந்து (  இரவு 7 மணி ) தமிழ்நாட்டில் 144 தடை உத்திரவு நடைமுறைக்கு வந்து விட்டது. மற்றோரு செய்தி.இன்று  இரவு 12 மணி முதல் நாடு முழுவதும் யாரும் வீட்டை விட்டு வெளியில் வரக்கூடாது “என்பதாக பிரதமர் மோடியும்  அறிவித்து விட்டார்.

கொரானா வைரஸை விரட்டுவதற்கான முயற்சியில் மத்திய மாநில அரசுகள் முனைப்புடன் இறங்கியிருக்கிற கால கட்டத்தில் சீனாவில் இருந்து இன்னொரு ஆபத்து .!

வேலையை முடித்து விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த 32 பேரில் ஒருவர் இறந்து போனார்.!

‘ஹாண்டா வைரஸ் ‘தாக்கி இறந்து போனாராம். இதனால் மற்ற அத்தனை பேரையும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள்.

“காய்ச்சல்,உடம்பு வலி ,தொடைகள் ,முதுகு ,இடுப்பு ,தோள் இங்கெல்லாம் வலி இருக்கும் என்கிறார்கள்.

இதென்ன சோதனை!