அபிக்யா ஆனந்த் .14 வயது சிறுவன்.
‘சொல்வதெல்லாம் பலித்து வருகிறது.கொரானா கொடிய நோய் பற்றி முன்பே குறிப்புகள் கொடுத்து சொன்ன” பால சோதிடர் என்கிறார்கள். உலகிலேயே குறைந்த வயது சோதிடர் அபிக்யா ஆனந்த்.
நம் ஊரிலும் அருள் வாக்கு சித்தர்கள் என சொல்லிக் கொள்பவர்கள் இருக்கிறார்கள் .அவர்களில் யாரேனும் ஒருவர் இந்த கொள்ளை நோயைப்பற்றி சொல்லவில்லை.
கோள்களின் நடமாட்டம் தெரிந்ததாக சொல்லிக்கொள்கிற ஜோதிடமேதைகளில் யாரேனும் ஒருவர் சுட்டிக் காட்டியதாகவும் தெரியவில்லை.
ஆனால் கர்நாடக மாநிலத்தில் வாழ்கிற இந்த சிறுவன் அமெரிக்கன் ஸ்லாங்கில் ஆங்கிலத்தில் அழகாக பேசுகிறான். நாட்டு நிலவரம் பற்றி சொல்கிறான்.
கொரானாவை பற்றி எச்சரித்த முதல் பால ஜோதிடன் இந்த அபிக்யாதான்.!
கோள்களின் நடமாட்டத்தின்படி ஜூன் 30 வரை பிரச்சினைகள்தான் என்கிறார் அபிக்யா.
கடுமையான உணவுக்கட்டுப்பாடு ஏற்படலாம் என எச்சரிக்கிறார். “விவசாயிகளுக்கு ஊரடங்கு போட்டால் எப்படி விவசாயம் செழிக்கும்?”என்று கேட்கிறார்.
“பாக்கெட் உணவுகளை வாங்காதீர்கள்.அதை சாப்பிடுவதால் உடம்பில் எதிர்ப்பு சக்தி குறைந்து விடும் “என்றும் எச்சரிக்கிறார்.
கொரானாவின் பிடி மே மாதத்திலிருந்து குறையத் தொடங்கும். ஆனால் புதுப்புது வைரஸ்கள் வரலாம் என்பதாகவும் எச்சரிக்கிறார்.
இவர் வலியுறுத்துவது இயற்கை விவசாயத்தை அழித்து விடாதீர்கள். மண் வளத்தை நாசம் செய்து விடாதீர்கள் என்பதுதான் என்றாலும் “பொருளாதார நெருக்கடி மிகப்பெரிய பாதிப்பினை உண்டாக்கும்” என்கிறார்.
2020-21 நமக்கு சோதனையான காலமே என்கிறார் இந்த குட்டிச் சாமியார்.