முகமது ஆரிப்.வயது 36 .ஒரு மாதத்துக்கு முன்னர்தான் மும்பையில் வாட்ச்மேன் வேலை கிடைத்தது.
அப்பா ஜம்மு -காஷ்மீர் ரஜவுரியில் இருக்கிறார்.
திடீரென ஒரு நாள் “அப்பாவுக்கு ஹார்ட் அட்டாக் .சீரியஸாக இருக்கிறார்”என்கிற தகவல் வருகிறது.
வயதானால் எல்லா நோய்களும் வரத்தான் செய்யும்.போகிற காலம்தான் போய்ச்சேரட்டும் என்று ஆரிப்பினால் இருக்கமுடியவில்லை..தந்தையின் பாசம்,தன்னை வளர்ப்பதற்க் அவர் பட்ட கஷ்டம் எல்லாம் கண்ணுக்குள் வருகிறது.
அப்பாவின் முகத்தை கடைசியாக ஒரு முறை பார்த்து விடலாம் என்கிற தவிப்பு.
ஆனால் எப்படி போவது?
இந்தியா முழுமையும் முழு அடைப்பு. வாகனங்கள் செல்லவில்லை. தனியாக வாடகைக்கு வாகனம் அமர்த்துகிற அளவுக்கு செல்வந்தன் இல்லை.
2100 கிலோ மீட்டர் பயணிக்க வேண்டும்.என்ன செய்வது?
சக வாட்ச்மேனிடம் 500 ரூபா கொடுத்து அவரது சைக்கிளை வாங்கிக்கொண்டு புறப்பட்டு விட்டார் ஆரிப்
கையில் 800 ரூபா.2 பாட்டில் தண்ணீர். சைக்கிளில் பயணம்.இடையில் எவ்வித தொல்லையும் இல்லை.எதிர்ப்பட்ட போலீசிடம் உதவி கேட்டும் உதவுகிற மனநிலையில் அவர்கள் இல்லை. 24 மணி நேரத்துக்கு பிறகு அவர் அப்போதுதான் குஜராத் எல்லையில் இருப்பதாக ஒரு பத்திரிகையாளருக்கு சொல்லியிருக்கிறார். நியூஸ் 18 ஊடகம்தான் ஜம்மு காஷ்மீர் அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு உதவி செய்யும்படி கேட்டுக்கொண்டிருக்கிறது.இரவில் சாலையோரம் தூக்கம்.விடிந்ததும் பயணம்.
செல்போனை வாய்ப்புள்ள இடங்களில் சார்ஜ் செய்து கொண்டு குடும்பத்தினருடன் பேசிக்கொண்டு வருகிறார்.
இன்னும் சொந்த ஊருக்கு போகவில்லை.
இறைவன் கருணை மிகுந்தவன் .துணை நிற்பான்.!