கொரானா செய்தியாகப் பார்த்துப் பார்த்து கவலையும் பயமும்தான் அதிகமாகிறது !
இதை தவிர்க்க அவ்வப்போது விசித்திரமான செய்திகளையும் படிக்கவேண்டும்.படங்களை பார்க்க வேண்டும்.
கிளு கிளு படங்களுக்கு மீரா மிதுன்,சன்னி லியோன் இப்படி சில நடிகைகள் இருக்கிறார்கள். உரித்த கோழியாக உடம்பு காட்டுவதற்கு அஞ்சாத சிங்கப்பெண்கள் இவர்கள்.! இந்த கிண்கிணி அழகிகளை தவிர்த்து…..
வேடிக்கையான செய்தி ஒன்று….!
மாமிச மலை என்று முன்னர் மல்யுத்த வீரர் கிங்காங்கை சொல்வார்கள்.
அர்பாப் கிஸ்ர் ஹயாத்துக்கு முன் கிங்காங் சிறு குன்று என்றுதான் சொல்லவேண்டும்.!
435 கிலோ வெயிட் யா ! வயது 27 தான் ஆகிறது. பாகிஸ்தானில் வாழ்கிற இவருக்கு ஏழு வருடங்களுக்கு முன்பே கல்யாண ஆசை வந்து விட்டது !
“என்னோட அப்பா அம்மா பேரப்பிள்ளைகளோடு விளையாடணும்னு ஆசைப்படுறாங்க. அவங்க ஆசையை நிறைவேத்தவேணாமா? அதான் பெண் பார்க்கிறேன்” என்கிறார் இந்த ஹல்க்.
ஆனால் மிகவும் இரக்கப்பட்ட மனுஷன்.
“சாதாரணமான பெண்ணா இருந்தா நசுங்கிப் போவாங்க. அவங்க வாழ்க்கையை நாசமாக்க நான் விரும்பல. என்னோட வெயிட் 435 கிலோ.உயரம் 6 அடி 6அங்குலம். எனக்கு மனைவியாக வருகிறவ என்னோட தோள் அளவுக்கு உயரமாவது இருக்கணும்ல. இருந்தாதானே நல்லது. 100 கிலோ வெயிட் இருந்தா பெட்டர். ஹெவி வெயிட் பாடி உள்ள மனைவியா இருக்கணும்னுதான் தேடுறேன். ஜோடி பொருத்தம் சரியில்லேன்னு யாரும் சொல்லிடக்கூடாது.
கிட்டத்தட்ட 300 பெண்கள் வரை பார்த்தாச்சு.செட் ஆகல.நான் ஆரோக்கியமான ஆள்.எனக்கு தினமும் காலை உணவில் 38 முட்டை வேணும்.அதிகமான அளவு கலோரி சாப்பாடு. எனக்கு ஈடு கொடுக்கிற அளவுக்கு மனைவி இருந்தால்தான் வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும்!” என்கிறார்.
ரோடு ரோலர் மாதிரியான இவருக்கு குறைந்தது டிராக்டர் சைஸ் அளவு சம்சாரம் அமைந்தால்தான் வளமான வாழ்வு,!