தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தீவிரம் அதிகரித்து வரும் நிலையில், சென்னை, மதுரை, கோவை, ஆகிய 3 மாவட்டங்களில் இன்று முதல் 4 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் 64 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.இதையடுத்து கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 1885 ஆக உயர்ந்துள்ளது.