இந்தியாவின் முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிப்பப்பட்டிருக்கிறார். நேற்று மாலையில் லேசான நெஞ்சு வலி இருந்ததால் அந்த பொருளாதார மேதை அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு 87 வயது.
கார்டியோ தொராசிக் பிரிவில் இருக்கும் அவரை தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணித்து வருகிறார்கள். கார்டியாலஜி பேராசிரியர் டாக்டர் நிதிஷ் நாயக் அவருக்கு சிகிச்சை அளித்து வருகிறார். காங்கிரஸ் கட்சியின் தலைமை மற்றும் எதிர்க்கட்சித்தலைவர்கள் டாக்டர் மன்மோகன் சிங் சீக்கிரம்குணம் பெற வேண்டும் என செய்திகள் அனுப்பி வருகிறார்கள்.