இயக்குநர் ஷங்கரிடம் ‘ஐ’ படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர் அருண் பிரசாத் என்ற வெங்கட் பார்க்கர்.இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை.இவர் சி.வி.குமார் தயாரிப்பில், ஜி.வி. பிரகாஷ் கதாநாயகனாக நடிக்கும் ‘4G’ என்ற திரைப்படத்தை இயக்கி வந்தார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிகட்டப் பணிகள் நடந்து வந்தது.
இந்நிலையில்,மேட்டுப்பாளையம் அருகில் இருக்கும் அன்னூரில் இருந்து அருண்பிரசாத் . இன்று காலை தனது பைக்கில் சென்றுகொண்டிருந்தார். அப்போது எதிரே எதிர்ப்புறம் வந்த டிப்பர் லாரி மோதி சம்பவ இடத்திலேயே அருண்பிரசாத் பரிதாபமாக உயிரிழந்தார்
அவரது மறைவுக்கு ‘4 ஜி’ திரைபடக்குழுவினர் மற்றும் திரையுலக பிரமுகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.இவ்விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.