ரமேஷ் திலக், ரேடியோ ஜாக்கியாக இருந்து நடிகர் ஆனவர்
பல படங்களில் வில்லனுக்கு நண்பனாக நடித்திருக்கிறார். கொஞ்சம் ரப் அண்ட் டப் ஆன கேரக்டர்களில் இவரை பார்த்திருக்கலாம். வெளிவரவிருக்கிற மாஸ்டர் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.மாப்பிள்ளை ,மங்காத்தா ,மரீனா ,சூத்து கவ்வும் உள்பட பல படங்களில் இவரை பார்த்திருக்கலாம்.
ம ம கி கி என்கிற பெயரில் ஒரு படம். இதை ஐந்து இயக்குநர்கள் கட்டி இழுத்திருக்கிறார்கள். இதில் திலக் முக்கிய வேடத்தில் வருகிறார்.
இந்த படத்தின் பிரீமியர் ஷோ வருகிற 30 ஆம் தேதி ZEE 5 இணைய தளத்தில் வெளியாகிறது. பொன் மகள் வந்தாள் ,பெங்குயின் ஆகிய படங்களைத் தொடர்ந்து இந்தப்படமும் வெளியாகிறது.