அஜித்துடன் என்னை அறிந்தால்,ஜெயம் ரவியுடன் ‘அப்பாடக்கர்’ ஆகிய படங்களில் நடித்து வரும் த்ரிஷா தன ட்வீட்டரில் திடீரென திருமணத்துக்கு பிறகு நடிகையாக தொடர எனக்கு எண்ணம் இல்லை. ஆனாலும் சினிமாவை விட்டு விலகி செல்லமாட்டேன். சினிமா தொடர்பில்தான் இருப்பேன் என அறிவிப்பை வெளியிட்டுள்ளார். சமீபத்தில், தயாரிப்பாளர் வருண் மணியனுக்கும் த்ரிஷாவுக்கும் திடீர் நிச்சயதார்த்தம் நடந்துள்ளதாக செய்திகள் வெளியாயின. இவர்களது திருமணம் வருகிற மார்ச் மாதம் நடக்க வு ள்ளதாக பரபரப்பு செய்திகளும் வெளியாகின.ஆனால்,இதை திரிசாவும் அவரது அம்மாவும் மறுத்து வந்த நிலையில் .திரிசா தனது ட்வீட்டரில் மேற்கண்ட செய்தியை வெளியிட்டிருப்பது திருமண செய்தியை அவர் உறுதி படுத்துவது போல் உள்ளது