தெலுங்கில் நாக் அஸ்வின் இயக்கத்தில் நானி, விஜய் தேவரகொண்டா நடித்த யவடே சுப்ரமணியம் என்ற படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை சாய் சுதா.இவர்,விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான ‘அர்ஜூன் ரெட்டி’ உள்ளிட்ட சில தெலுங்கு படங்களில் நடித்துள்ளார்.
இவரும் மகேஷ்பாபு நடித்த போக்கிரி, பிசினஸ்மேன், ஜூனியர் என்.டி.ஆர் நடித்த டெம்பர், வெங்கடேஷ் நடித்த பாடிகார்ட், ராம்சரணின் சிறுத்தா, அல்லு அர்ஜுன் நடித்த ஜுலாயி உட்பட பல படங்களின் பிரபல ஒளிப்பதிவாளருமான ஷியாம் கே.நாயுடுவும் மிக தீவிரமாக காதலித்து வந்தனர்.
இந்நிலையில், நடிகை சாய் சுதாவிடம், ஒளிப்பதிவாளர் ஷ்யாம் கே.நாயுடு திருமணம் செய்வதாக வாக்குறுதிக் கொடுத்திருந்தாராம். இதையடுத்து அவரிடம் சாய் சுதா நெருங்கிப் பழகி, இருவரும் ஒன்றாகவும் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர்.ஆனால், நடிகையிடம் கொடுத்த வாக்குறுதியின் படி, அவரை திருமணம் செய்துகொள்ள ஷ்யாமகே.நாயுடு மறுத்து விட்டதாகவும், கடந்தசில நாட்களாக சாய்சுதாவை சந்திப்பதை தவிர்த்தும் வந்துள்ளார்.
இதனால் கடுப்பான நடிகை சாய் சுதா, ஐதராபாத்தில் உள்ள எஸ்.ஆர்.நகர் போலீஸ் ஸ்டேஷனில், ஷ்யாம் கே. நாயுடு மீது,தன்னை திருமணம் செய்வதாக ஏமாற்றி, மோசடி செய்துவிட்டார் என்று அதிரடியாக புகார் அளித்தார். இதையடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார்,ஒளிப்பதிவாளர் ஷியாம் கே நாயுடுவை அதிரடியாக கைது செய்து,அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இச்சம்பவம் தெலுங்கு திரை உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு தெலுங்குத் திரையுலகில் நடந்த போதைபொருள் வழக்கில் நடிகை சார்மி உட்பட நடிகர், நடிகைகள் சிறப்பு விசாரணை குழுவால் விசாரிக்கப்பட்டனர். இதில் ஷியாம் கே.நாயுடுவும் ஒருவர். இவரிடம் விசாரணைக் குழு 10 மணி நேரம் அப்போது விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது. மேலும்,ஷியாம் கே.நாயுடு,பிரபல தெலுங்கு ஒளிப்பதிவாளரான சோட்டே கே.நாயுடுவின் சகோதரரும்,தமிழில் யாருடா மகேஷ், மாநகரம், மாயவன் படங்களில் கதாநாயகனாக நடித்த சந்தீப் கிஷனின் நெருங்கிய உறவினரும் ஆவார்.