இந்த கொரானா காலத்தில் மிகச்சிறந்த மனிதாபிமானி என்கிற மரியாதையை பெற்றிருப்பவர் நடிகர் சோனு சூட்.
பாலிவுட் நடிகர்.தமிழ்ப்படங்களிலும் வில்லனாக நடித்திருப்பவர். தன்னுடைய நட்சத்திர ஹோட்டலை கொரானா தடுப்பு காரியங்களுக்காக பயன்படுத்திக்கொள்ள அளித்திருக்கிறார்.
மேலும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் போவதற்கு போக்குவரத்து வசதிகளை செய்து கொடுத்திருக்கிறார். அடித்தட்டு மக்களின் வறுமை அறிந்து உதவிகளை செய்து கொண்டிருக்கிறார்.
புலம் பெயர்ந்தவர்களில் ஒரு கர்ப்பிணிப் பெண் சொந்த ஊர் போய்ச்சேர்ந்ததும் அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்து அதற்கு சோனு சூட் என பெயர் வைத்திருக்கிறார்.
இதை அறிந்த சோனு “என்னம்மா இப்படி பண்ணிட்டிங்களேம்மா,ஸ்ரீவத்சவா எப்படிம்மா சோனு சூட் ஆக முடியும் ?ஸ்ரீ வத்சவாசோனு சூட் என்று வேண்டுமானால் வைத்துக் கொள்ளுங்கள்” என்று அவரது குடும்பப்பெயரை நினைவு படுத்தியிருக்கிறார் .அதற்கு அந்த பெண்மணி “முடியாது ! சோனு சூட் ஸ்ரீ வத்சவா என்றுதான் வைத்திருக்கிறோம் “என்று உறுதியுடன் சொல்லிவிட்டார்.
இன்னொரு கோரிக்கை ட்வீட்டர் வழியாக சோனுவுக்கு .!
அனுப்பியவர் ஒரு பெண்.! சுஷ்ரீமா ஆச்சார்யா !!
“சோனு சூட். ! கடந்த 60 நாள் லாக் டவுனில் என் புருசனுடன் வாழ்ந்து அலுத்துப்போச்சு. அவரை இடம் மாத்துங்க. இல்லேன்னா என்னை எங்கம்மா வீட்டுக்கு அனுப்புங்க” என்று சீரியஸாக கோரிக்கை வைத்தருக்கிறார்.
புருஷன் என்கிற புண்ணியவான் என்ன பண்ணினானோ மனைவிக்கு தாங்க முடியவில்லை.!
இதற்கு சோனு சொல்லியிருக்கிற பதில் “என்னிடம் நல்ல ஐடியா இருக்கிறது. இரண்டு பேரையும் கோவாவுக்கு அனுப்பி வைத்து விடவா?”
இதற்கு இன்னும் பதில் வரவில்லை. கோவாவுக்கு போனாலும் புருஷன் அதைத்தானே செய்யப்போகிறான். அவனது அலும்பு தாங்காமல்தானே இடம் மாற விரும்புகிறாள் ?
பார்த்து செய்யுங்கப்பு.!