தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த தந்தை-மகனான வியாபாரிகள் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் போலீசாரால் கைது செய்யப்பட்டு, கோவில்பட்டி கிளைச்சிறையில் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இச் சம்பவம் தற்போது பெரும் புயலைகிளப்பியுள்ளது.அரசியல்கட்சிகள், திரையுலக பிரபலங்கள் ,சமூக ஆர்வலர்கள் என பலரும், கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இயக்குனர் ஹரி விட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது,
“சாத்தான்குளம் சம்பவம் போல் இனி ஒரு கொடூரம் தமிழக மக்களுக்கு நடந்துவிடக்கூடாது . அதற்கு ஒரே வழி சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் அனைவருக்கும் அதிகபட்ச தண்டனை வழங்குவதே….
காவல்துறையில் உள்ள சிலரின் இந்த அத்துமீறல் அந்த துறையையே இன்று களங்கப்படுதியுள்ளது. …
காவல் துறையை பெருமைப்படுத்தி ஐந்து படம் எடுத்ததற்காக இன்று மிக மிக வேதனைப்படுகிறேன்…இவ்வாறு அவர் கூறியுள்ளார். இயக்குனர் ஹரிஇயக்கத்தில் உருவான ,சாமி,சிங்கம்,உள்பட 5 படங்கள், போலீஸ் பெருமை பேசும் படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.