கல்யாணம் செய்து கொள்வதாக சொல்லி நடிகையை ஏமாற்றியிருக்கிறார் பிரபல ஒளிப்பதிவாளர்.
சும்மா விடுவாரா நடிகை போலீசில் புகார் செய்து விட்டார்.
யார் அவர்கள்?
தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகை சாய் சுதா. பிரபல ஒளிப்பதிவாளர் ஷியாம் கே.நாயுடு. இருவரும் காதலர்கள்.
லிவ் இன் ரிலேஷன்ஷிப் .ஒன்றாக வாழ்ந்தனர்.பிறகென்ன கல்யாணம் பண்ணிக்கொண்டு வாழவேண்டியதுதானே.! நடிகை சாய் சுதா திருமணம் என நெருக்கடி கொடுக்க, ஒளிப்பதிவாளர் ஷியாம் கே.நாயுடு ஆத்தாடி… ஆளைவிடு. என நைசாக கழன்று கொண்டு விட்டார்
, விடுவாரா நடிகை, தன்னை திருமணம் செய்துகொள்ளாமல் ஏமாற்றிவிட்டதாக ஐதராபாத்தில் உள்ள எஸ்.ஆர்.நகர் போலீஸ் ஸ்டேஷனில், அதிரடியாக புகார் கொடுக்க, விசாரணை நடத்திய போலீசார், ஒளிப்பதிவாளர் அவரை கைது செய்தனர்.
ஷியாம் கே.நாயுடு ஏற்கனவே போதைபொருள் வழக்கில் பரபரப்பாகப் பேசப்பட்டவர்.தெலுங்கு திரையுலகமே பரபரப்பானது.இச் சம்பவம் நடந்து 2 மாதங்கள் ஆன நிலையில், இந்த விவகாரத்தில் தாங்கள் சமாதானமாகச் சென்றுவிடுவதாக, நம்பள்ளி நீதிமன்றத்தில் கூறியதை அடுத்து, ஒளிப்பதிவாளருக்கு ஜாமின் வழங்கப்பட்டது.
சரி பிரச்சனை முடிந்தது என நினைத்தால். இங்கு தான் விவகாரமே. (ஒளிப்பதிவாளர் சமாதான பேச்சு வார்த்தை படி நடக்கவில்லை என்று கூறப்படுகிறது). சமாதான விவகாரத்தில் தனது கையெழுத்தை மோசடியாகப் போட்டுள்ளதாக நடிகை சாய் சுதா, நீதிமன்றத்தில் தெரிவிக்க, விசாரித்த நீதிமன்றம்,ஒளிப்பதிவாளரின் ஜாமினை உடனடியாக ரத்து செய்தது.
பின்னர் அவருக்கு எதிராக 2 வழக்குகளை பதிவு செய்யுமாறு போலீசுக்கு உத்தரவிட்டது. இதனால் ஷியாம் கே நாயுடுவுக்கு மீண்டும் சிக்கல் எழுந்துள்ளது. அவர் மீண்டும் கைது செய்யப்படுவார் என்று தெரிகிறது. இந்த மோசடி சம்பவம் டோலிவுட்டில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
நடிகை சாய்சுதா தெலுங்கில் ‘அர்ஜூன் ரெட்டி’ உள்பட சில படங்களில் நடித்துள்ளார்.ஒளிப்பதிவாளர் ஷியாம் கே.நாயுடு,மகேஷ்பாபு நடித்த போக்கிரி, பிசினஸ்மேன், ஜூனியர் என்.டி.ஆர் நடித்த டெம்பர், வெங்கடேஷ் நடித்த பாடிகார்ட், ராம்சரணின் சிறுத்தா, அல்லு அர்ஜுன் நடித்த ஜுலாயி உட்பட பல சூப்பர் ஹிட் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. .