
விதி இருக்கே ,அது எஃ கு கொட்டையையும் துளைத்துக்கொண்டு உள்ளே புகுந்து விடுமாம்.
அடுக்கு மாடிக்குடியிருப்பு அதுக்கு என்ன தடையா? புகுந்து நடிகர் ஷாமை தூக்கிவிட்டதே.!
ஏய் நீ ரொம்ப அழகாய் இருக்கே, லேசா லேசா உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் ஷாம். தற்போது சென்னை நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் சாலையில் உள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வருகிறார். நேற்றிரவு சட்டவிரோத செயலில் ஈடுபட்டதற்காக இவர் போலீசாரால் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஷாம் தனது வீட்டில் சீட்டு விளையாடி சட்ட விரோதமாக சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து, ஷாம் வீட்டில் திடீரென சோதனை மேற்கொண்டனர்.
என்னங்கப்பா இது நியாயம்.?செல்போனில் ரம்மி விளையாடச்சொல்லி கற்றுக் கொடுக்கிற போது வீட்டில் விளையாடினால்மட்டும் தப்பா?
அப்போது அவருடன் 13பேர் சீட்டு விளையாடி கொண்டிருந்தனர் என்கிறது முதல் தகவல் ., அவர்களிடம் இருந்து சீட்டு கட்டுகளும், பணமும் பறிமுதல் செய்யப்பட்டு போலீசாரால் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களில் வணிகர்கள், புதிய இயக்குநர்கள், ஹோட்டல் உரிமையாளர்கள், வழக்கறிஞர்கள் என பலர் அடங்குவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதனையடுத்து அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கவலையே பட வேணாம் .வக்கீல்கள் வழக்கை உடைத்து விடுவார்கள்.












