ஆண் ,பெண்ணுன்னு பாகுபாடு பார்க்காதே! –யாரை சொல்றார் ஆஷிமா ?

என்னம்மா பண்றது ?கொரானா போற வரை இப்படி கண்ணாடியைத்தான் பாத்துக்கிட்டு இருக்கணும்.இல்லேன்னா இன்ஸ்டராகிராமில் அள்ளிக்கோ அணைச்சுக்கோன்னு அரை குறை ட்ரஸ்ல உடம்ப காட்டிட்டு இருக்கணும்.
ஆனா அந்த அளவுக்கு நீ மோசமில்லை தாயி.! அழகா இருக்கே தாயி.! உடம்புல இருக்கிற பார்ட்ஸ்கள்லதான் அழகு இருக்குன்னு நீ நம்பாத.!
பெண் அதிகாரத்த முன்னெடுக்கும் வகையில், பெண்ணை ஆதரிக்கும் பெண் என்ற ஹேஷ்டாக்குடன் ஏராளமான கறுப்பு வெள்ளை புகைப்படங்கள் சமூக வலைதளங்களை நிரப்பி வருது.
இப்ப நடிகை ஆஷிமா நார்வால், தன்னோட படத்தை வெளியிட்டு மனிதம், அன்பு, பரிவு ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கிற மாதிரி ஒரு செய்தியையும் பகிர்ந்திருப்பது இணையவாசிகளின் இதயங்களை அள்ளிட்டு போயிருச்சு.
ஆஷிமா நார்வால்என்ன சொல்றார்னா “நேர் மறை நோக்கத்துடன் நல்ல செயல்கள் செய்பவர்கள், நேர்மையாக இருப்பவர்கள், பிறருக்குத் தீங்கு செய்யாதவர்கள், நிஜ வாழ்க்கையில் நடிக்காதவர்கள் என்றிருக்கும் அனைவரையும் ஆண்-பெண் பால் பாகுபாடு பார்க்காமல் நான் ஆதரிக்கிறேன்.
பெண் பெண்ணுக்கு ஆதரவு காட்டுகிறாளா அல்லது ஆண் ஆணுக்கு ஆதரவு காட்டுகிறானா என்பதல்ல விஷயம்.
நல்லவர்களுக்கு நல்லவர்கள் ஆதரவு காட்ட வேண்டும் என்பதே முக்கியம்.
பல ஆண்கள் எனக்கு ஆதரவு காட்டியதால்தான் ஆசிர்வாதமான வாழ்க்கை எனக்கு அமைந்தது.
ஆணோ அல்லது பெண்ணோ அது முக்கியமல்ல. எந்த பாலினத்தவர் என்றாலும், அவரது நோக்கம் மட்டுமே கணக்கில் கொள்ளப்படும். எனது பயணத்திற்கு உறுதுணையாக இருக்கும் ஆண் பெண் அனைவருக்கும் இந்த கறுப்பு வெள்ளைப் படத்தை சமர்ப்பிக்கிறேன். அனைவருக்கும் நல்வாழ்த்துகள்” என்கிறார்ங்க ஆஷிமா நார்வால்.