
மனைவி மேல் காதல் கொள்ளடா என்று எந்த சினிமாவிலோ கலைவாணர் என்.எஸ்.கே. பாடியதாக ஒரு நினைவு.
மனைவி இறந்த பிறகும் மாறாத அன்புடன் வாழ்கிற மனிதர்களும் இருக்கிறார்கள்
வணங்கத்தக்கவர்கள்.
மனைவியின் சடலம் எரியூட்டப்படும் போதே தன்னுடைய படுக்கையில் அடுத்து உறங்கப்போவது யார் என திட்டமிடுகிறவர்களும் இல்லாமல் இல்லை. இத்தகைய மனிதர்கள் வாழ்கிற உலகில்தான் அரிதான ஒரு மனிதரும் வாழ்கிறார்.
அவரின் பெயர் சீனிவாச குப்தா. கொப்பல் மாவட்டம். ஆந்திராவில் இருக்கிறது.
பத்து ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு விபத்தில் மனைவியை இழந்து விட்டார்.
ஆனாலும் மனைவியின் அன்பினை மறக்கவில்லை. மனதில் இருத்தி வாழ்ந்து கொண்டிருந்தார் .
அவருக்கு ஆசை. தன்னுடைய புதிய இல்லத்துக்கு மனைவியை வைத்துதான் புகுமனை விழாவினை நடத்த வேண்டும் என்கிற தாகம் .
அவரது ஆசை நிறைவேறியது. மனைவியை சோபாவில் அமர்த்தி அழகு பார்த்தார் .பட்டுச்சேலை ,நகைகள் அணிவித்து அழகு பார்த்தார் .பக்கத்தில் அமர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார் ,பிள்ளைகளும் எடுத்துக்கொண்டார்கள்.
இது எப்படி சாத்தியம் ஆயிற்று?
நம்பமுடியவில்லையா?
நீங்களே படத்தை பாருங்கள் புரியும் !மனைவியின் காலைபார்த்தால் தெரியும்
ஆமாம் !
அற்புதமாக வடிவமைக்கப்பட்ட மெழுகுச்சிலை.
இந்த நூற்றாண்டில் இத்தகைய சிலைகள் செய்வது காஸ்டலியானது. எனறாலும் மனைவிக்கு சிலை அமைக்க வேண்டும் என்கிற எண்ணம் வரவேண்டுமே!












