கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக திரைப்பட பின்னணிப்பாடகர் எஸ்.பி.பால சுப்ரமணியம்கடந்த 2 வார காலமாக தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.அவருக்கு காணொளி மூலம் லண்டன் உள்ளிட்ட வெளிநாட்டு மருத்துவர்களின்ஆலோசனைப்படி 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பில் சிகிசசையளிக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் அவரது மகன் எஸ்.பி.பி. சரண் தற்போது வெளியிட்டுள்ள புதிய வீடியோவில், 90% மயக்க நிலையில் இருந்து எஸ்பிபி மீண்டுள்ளதாகவும்,அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், விரைவில் எஸ்.பி.பி. பூரண குணமடைந்து வீடு திரும்புவார் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் கூறியுள்ளார். (வீடியோ இணைப்பு கீழே…)