முதலில் இது இங்கிலீஸ் படம் இல்லை என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
தமிழ்நாட்டில் ,தமிழ்ப்படங்களுக்கு தமிழில் பெயர் வைப்பது என்பது கலைஞர் கருணாநிதி காலத்துடன் முடிந்து விட்டது.
ஒரு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் என்பது மிகவும் முக்கியம். அது தான் ஒவ்வொரு படத்தின் கதைகளம், நடிகர்களின் லுக் ஆகியவற்றை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தும். இங்கு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டராக அமைந்துள்ளது ‘தி சேஸ்’
கார்த்தி ராஜு இயக்கத்தில் ரைசா வில்சன், ஹரிஷ் உத்தமன், பால சரவணன், காளி வெங்கட், குழந்தை மோனிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
குறைந்த நடிகர்களை வைத்துக் கொண்டு பலம் வாய்ந்த தொழில்நுட்பக் குழுவினருடன் ‘தி சேஸ்’ உருவாகியுள்ளது. இதற்கு ஒளிப்பதிவாளராக வேல்ராஜ், சண்டைப் பயிற்சியாளராக திலீப் சுப்பராயன், இசையமைப்பாளராக சாம் சி.எஸ், எடிட்டராக சாபு ஜோசப் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர். ராஜ்சேகர் வர்மா தயாரித்துள்ளார்.
இந்நிறுவனத்துக்காக கார்த்திக் ராஜு இயக்கி வரும் ‘சூர்ப்பனகை’ திரைப்படம் கொரோனா அச்சுறுத்தலால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ‘தி சேஸ்’ பணிகளை முடித்துவிட்டு, ‘சூர்ப்பனகை’ படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.
‘தி சேஸ்’ கதைகளத்துக்கு திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை பொருத்தமான இடமாக இருந்ததால், அங்கேயே ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் முடித்துவிட்டு திரும்பியுள்ளது படக்குழு. படப்பிடிப்புக்கும் முன்பும், பின்பும் நடிகர்கள், படக்குழுவினர் உட்பட 28 பேருக்கும் கோவிட் 19 பரிசோதனை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இது ஒரு தாய், ஒரு மகள் மற்றும் ஒரு பதின்வயது இளைஞர் ஆகியோரை பற்றிய படம். ஒரே இரவில் நடக்கும் கதையும் கூட.
.