லோகேஷ் கனகராஜின் ’கைதி’ படத்தின் மூலம் மிரட்டல் வில்லனாக அறிமுகமான நடிகர் அர்ஜுன் தாஸ்.
விஜய் நடித்த ’மாஸ்டர்’ படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில் நடிகர் அர்ஜுன்தாஸ் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் ’அந்தகாரம்’. இயக்குனர் அட்லீயின் தயாரித்துள்ள இப்படம் தற்போது வெளியீட்டுக்கு தயாராக உள்ளது.
இம்மாதம் ஓடிடியில் வெளியாக உள்ளதாகவும், இது குறித்த அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என்கிறார்கள்.
விக்னேஷ் ராஜன் இயக்கியுள்ள இப் படத்தில், அர்ஜுன் தாசுடன் வினோத் கிஷான், பூஜா, குமார் நடராஜன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தில் மூன்று கதைகள் இருப்பதாகவும் மூன்று கதைகளும் ஒரு புள்ளியில் இணையும் வகையில் திரைக்கதை உருவாக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது..