கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் கடந்த சில வாரங்களுக்கு முன்னர், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவர் தற்போது கொரோனாவில் இருந்து குணமாகிவிட்டாலும் நுரையீரல் பிரச்சனை காரணமாக எக்மோ மற்றும் வென்டிலேட்டர் கருவி மூலம் சிகிச்சை பெற்று வருவதாக அவரது மகன் எஸ்.பிபி சரண் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் பாடகர் எஸ்.பி.பிக்கு நுரையீரலில் பிரச்சினை காரணமாக , நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் முடிவு செய்துள்ளதாக சில இணையதளங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் எஸ்பிஐபி உடல்நிலைக்குறித்துமருத்துவமனையின் அறிக்கை பின்வருமாறு, “எம்ஜிஎம் ஹெல்த்கேரில் கோவிட் -19 காரணமாக அனுமதிக்கப்பட்ட பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமண்யம் உடல்நிலை சீராக உள்ளது.தொடர்ந்து அவருக்கு வென்டிலேட்டர் மற்றும் ‘எக்மோ’ உதவி தேவைப்படுகிறது. அவர் விழித்திருக்கிறார், பதிலளிக்கக்கூடிய வகையிலும் உள்ளார் . அவரது முக்கியஉடல் உறுப்புகளின் செயல்பாடுகள் திருப்திகரமாக உள்ளன. அவரது தற்போதைய மருத்துவ நிலை தீவிர சிகிச்சை பிரிவில் (ஐ.சி.யூ)சில நாட்கள் இருக்க வேண்டும். ”இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.