மகாராஷ்டிரா அரசுக்கும் நடிகை கங்கனாவுக்கும் யுத்தம் ஸ்டார்ட் !

கங்கனா ரனாவத்தின் மும்பை அலுவலகத்தை இன்று மும்பையில் அரசு இடித்துத் தள்ளிவிட்டது .

மும்பை நீதிமன்றம் இடிப்பதற்கு தடை விதித்தாலும் முக்கால் வாசி இடிப்பு வேலைகள் முடிந்து விட்டன.

எந்த அரசை எதிர்த்தாலும் இதுதான் கதி என்பதற்கு நல்ல உதாரணம்.

ஜனநாயகத்தின் சாவு என்று கங்கனா குமுறியிருந்தாலும் கூடி அழுவதற்கு பாலிவுட் பிரபலங்கள் யாரும் வரவில்லை. மாறாக ஸ்ரீ தேவியின் கணவர் போனிகபூர் “நான் விதிகளை மீறி கட்டிடம் கட்டவில்லை”என்பதாக நைஸ் குத்தாக குத்தியிருக்கிறார் கங்கனாவை.! மகாராஷ்டிரா சிவசேனா அரசுக்கும் நடிகை கங்கனாவுக்கும் இடையில் யுத்தம் தொடங்கிவிட்டதாகவே சொல்லலாம்.