எஸ்.பி.பி.உடல் நிலை குறித்து எஸ்.பிபி சரண் தற்போது விடுத்துள்ள வீடியோவில் கூறியுள்ளதாவது,”அப்பாவின்(எஸ்.பிபி) உடல்நிலை குறித்து, நான் அடிக்கடி பகிர்ந்து கொளவதில்லை. ஆனால், முன்பு நான் சொன்னதைப்போலவே அப்பாவின் உடல்நிலை மெதுவாக, ஆனால் நிலையாகமுன்னேற்றம் அடைந்து வருகிறது. அதற்கு நிறைய நேரம் ஆகிறது. அதனால் நாங்கள் அதிரடியான மாற்றங்கள் எதையும் எதிர்பார்க்கவில்லை.தினமும் நான் மருத்துவமனைக்கு சென்று அப்பாவை பார்த்து வருகிறேன்.அவர் நல்ல ஆரோக்கியத்துடன் தொடர்ந்து எக்மோ, வெண்டிலேட்டர் கருவிகளின் உதவியுடன் சிகிச்சை பெற்று வருகிறார். எந்தச் சிக்கலும் இல்லை.
அப்பா வீடு திரும்பிவிட்டார், நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை நடக்கப் போகிறது என்பது பற்றிய செய்திககளில் எல்லாம் எந்த உண்மையுமில்லை .அவரது நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கு விண்ணப்பித்திருப்பதாகச் சொல்லப்பட்டதிலும் உண்மையில்லை. அதே போல் ஐசியுவில் இருந்து கொண்டே ரசிகர்களுக்காக அப்பா பாட்டு பாடினார் என்ற செய்தியிலும் உண்மையில்லை.அப்பா நன்றாக தேறி வருகிறார்.
உங்களின் பிரார்த்தனைகள் வேலை செய்கிறது.அவர் மயக்க நிலையில் இருந்து மீண்டு விட்டார். விழிப்புடன் இருக்கிறார். விரைவில் குணமாகிவிடுவார். எவ்வளவு விரைவில் என்பது கடவுளின் கைகளில் தான் இருக்கிறது”.இவ்வாறு வீடியோவில் எஸ்பிபி சரண் கூறியுள்ளார்.