ஜென்டில்மேன் குஞ்சுமோனின் விசுவரூபம்.!
கதை சொல்லும் சினிமா,பிரமாண்ட சினிமா என்கின்ற சினிமா படைப்புகளில்.. கதையுடன் கூடிய பிரமாண்ட சினிமாவை அதிரடியாக தயாரித்துக் காட்டியவர் கே.டி.குஞ்சுமோன். வசந்தகால பறவை, சூரியன் படங்களின் மாபெரும் வெற்றிகளை தொடர்ந்து, 1993ல் பிரமாண்டமாக தயாரிக்கப்பட்ட படம் “ஜென்டில்மேன்”.
ஜென்டில்மேன்2 மூலம் மீண்டும் தயாரிப்பு வேலைகளை ஆரம்பிக்கிறேன் என்கிற அவர்மேலும் கூறும்போது..ஜென்டில்மேன் தமிழ் , தெலுங்கு, மொழிகளில் மெகா ஹிட் ஆக்கினார்கள் மக்கள். இந்திய மற்றும் உலகம் முழுவதும் பல மொழிகளில் வெளியிடப்பட்ட இப்படத்தை ரசிகர்கள் கொண்டாட்டமாக வரவேற்றார்கள்.
ஜென்டில்மேன் படத்தை விட இரண்டு மடங்கு பிரம்மாண்டம் ஜென்டில்மேன்-2 வில் காணலாம்.
ஜென்டில்மேன்-2 பற்றிய அதிகார பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளி வரும். இந்த திரைப்படம் முதலில் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியான பிறகு தான் மற்ற ஊடகங்களில் வெளியிடப்படும் என்ற கருத்தையும் தெரிவித்தார்.