மியா நடத்திய கல்யாண பார்ட்டி.மேடம் குஷ்பு கவனத்துக்கு.!

தமிழில் அமரகாவியம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் மலையாள நடிகை மியா ஜார்ஜ்.
தொடர்ந்து, இன்று நேற்று நாளை, வெற்றிவேல், ஒரு நாள் கூத்து,எமன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளவர் தற் போது அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் கோப்ரா படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், மியாஜார்ஜ் , அஸ்வின் பிலிப் என்கிற தொழிலதிபரை, கோட்டயம் தேவாலயத்தில் முறைப்படி திருமண நிச்சயதார்த்தம் செய்துகொண்டனர்.
லாக்டவுன் காரணமாக நெருங்கிய உறவினர்கள் சிலர் மட்டுமே கலந்து கொண்டனர். இம்மாதம் இவர்களது திருமணம் நடக்க இருப்பதாக கூறப்பட்ட நிலையில், கொரோனா பரவல் தீவிரமடைந்து வருவதால் திருமணத்தை எப்போது, எப்படி நடத்துவது என்ற குழப்பத்தில் குடும்பத்தினர் இருப்பதாக ஏற்கனவே நடிகை மியா ஜார்ஜ் கூறியிருந்தார்.
இந்நிலையில் இவர் திருமணத்துக்காக, அவர் தோழிகள் இணைந்து பார்ட்டி கொடுத்துள்ளனர். பெண்கள் மட்டுமே கலந்துகொண்ட இந்த பார்ட்டியில், நடிகை மியாவுக்கு அவர்கள் பரிசுகளை கொடுத்து வாழ்த்தியுள்ளனர். அந்தப் புகைப்படங்களை மியா, தனது சமூக வலைதளப் பக்கத்திலும், பார்ட்டி வீடியோவை நடிகை மியாவின் சகோதரி தனது யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ளார்.முகமூடியும் இல்லை.சமூக இடைவெளியும் இல்லை.
மேடம் குஷ்பூ ! இவங்களையும் கவனிங்க.