விக்ரம்- கவுதம்மேனன் படம் வெளியாகிறதா?
கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் நீண்ட நாட்களாக உருவாகி வரும் படம் ‘துருவ நட்சத்திரம்’. ஸ்பை திரில்லர் கதையை மையப்படுத்திஉருவாகியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு பல்வேறு நாடுகளில் நடத்தப்பட்டுள்ளது.
இதில், இதில், விக்ரம், ஜான் என்ற கதாபாத்திரத்தில் சீக்ரெட் ஏஜெண்டாக நடித்துள்ளார். இவருடன், ரித்து வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ், சிம்ரன், பார்த்திபன், விநாயகன், ராதிகா சரத்குமார், திவ்யதர்ஷினி, வம்சி கிருஷ்ணா ஆகியோர் பலர் நடித்துள்ளனர். ஹாரிஷ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் சில பிரச்சனைகளில் சிக்கியுள்ள இப்படத்தை விரைவில் திரைக்கு கொண்டு வரும் முயற்சியில் தயாரிப்பு தரப்பு மிகவும் மும்முரமாக ஈடு பட்டு வருகிறது.மேலும் இப்படத்தில் இடம்பெறும் தாமரை வரிகளில் ,கார்த்திக் மற்றும் ஷாஷா திருப்பதி இணைந்து பாடியுள்ள ‘ஒரு மனம்’ எனத் தொடங்கும் பாடலை அடுத்த வாரம் இணையதளம் வாயிலாக வெளியிட உள்ளனராம்.