கடந்த செப்டம்பர் 23ம் தேதி தேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அவரைத்தொடர்ந்து விஜயகாந்த் மனைவியும் தேமுதிக பொருளாளருமான பிரேமலதா விஜயகாந்துக்கும் வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு அவரும் சிகிச்சைக்காக அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், சிகிச்சைக்குப் பின், கொரோனாவிலிருந்து குணமாகி தேமுதிக தலைவர் விஜயகாந்த், பிரேமலதா விஜயகாந்த் இருவரும் இன்று மாலை 7 மணியளவில் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினர்.