திரையரங்குகள் அனைத்தும் கொரோனா லாக் டவுனால் கடந்த 5 மாதத்திற்கும் மேலாக மூடப்பட்டுள்ள நிலையில் மக்களின் பெரிய பொழுதுபோக்கு ஓடிடி ,சமூக வலைதளங்கள் தொலைகாட்சி நிகழ்ச்சிகள் தான் இந்நிலையில் பெரும் எதிர்பார்ப்புக்கிடையே உலகநாயகன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி இன்று மாலை 6 மணிக்கு தொடங்குகிறது.பிக்பாஸ் -4 நிகழ்ச்சி பற்றிய அறிவிப்பு வெளியானதிலிருந்தே இதன் போட்டியாளர்கள் குறித்து பலவிதமான தகவல்கள் வெளியாகி வந்த நிலையில் இறுதியாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள போட்டியாளர்கள் குறித்த தகவல் நேற்று மாலை வெளியாகியுள்ளது. இப்பட்டியலில் ரியோ ,சனம்செட்டி, ஷிவானி நாராயணன், ரம்யா பாண்டியன், ரேகா, ஆரி , பாடகர் வேல்முருகன், கேப்ரில்லா, ராம், சூப்பர் சிங்கர் ஆஜித், அனுமோகன்,அறந்தாங்கி நிஷா,அர்ச்சனா அனிதா சம்பத், ஜித்தன் ரமேஷ்,பாலாஜி முருகதாஸ் உள்ளிட்டோர் பங்கேற்பதாக தெரிய வந்துள்ளது.