கொரோனா வைரஸ் ஊரடங்கில் படப்பிடிப்புகள் முடக்கப்பட்டு இருந்தன. துறை சார்ந்தவர்களுக்கு வருமானம் இல்லை. இதனால் தவித்த திரையுலகைச் சேர்ந்த சிலர்,காய்கறிகள் வியாபாரம், மீன் வியாபாரம், பழ வியாபாரம், மளிகை வியாபாரம், ஆட்டோ, கார் ஓட்டுவது உள்படபல்வேறு தொழில்களை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் மணிவண்ணன் இயக்கிய ’வாழ்க்கைச் சக்கரம்’ என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி தொடர்ந்து பல படங்களிலும் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்த பிருந்தா என்ற நடிகை , தற்போது சமையல் வேலை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி கணவருடன் மலேசியா சென்ற பிருந்தா, மலேசியாவில் கொரோனா பாதிப்பு அதிகமானதால் தற்போது மீண்டும் சென்னை திரும்பியுள்ளார்.
சென்னையில் அவர் மலேசிய உணவுகளை தயாரித்து சினிமா பிரபலங்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும், இதன்மூலம் அவருக்கு நல்ல வருமானம் வருவதாகவும் கூறப்படுகிறது.தற்போது ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு சின்னத்திரை தொடர்கள்,திரைப்படங்களின் படப்பிடிப்புகள் நடந்து வரும் நிலையில், சில தொலைக்காட்சி தொடர்களில்நடிக்க பிருந்தாவுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும் விரைவில் அவரை தொலைக்காட்சி சீரியல்களில் பார்க்கலாம் என்கிறார்கள்.