ஊரடங்கில் தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, சினிமா மற்றும் டி வி படப்பிடிப்புகளும் நடந்து வருகிறது.
திரையரங்கு உரிமையாளர்களின் கோரிக்கையை ஏற்று வரும் 15 ஆம் தேதி முதல் கட்டுப்பாடுகளுடன் திரையரங்குகளை திறக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இதன் அடிப்படையில் தற்போது மத்திய அரசு தியேட்டர்களை திறப்பதற்கான வழிகாட்டுதல்களை அறிவித்துள்ளது.அதில், ”கிருமிநாசினி மூலம் திரையரங்கு முழுவதும் சுத்தம் செய்ய வேண்டும். ஒரு காட்சி முடிந்து அடுத்த காட்சி தொடங்கும் முன்பாக முழுமையாக கிருமி நீக்கம் செய்யப்பட வேண்டும். அனுமதிக்கப்படும் பார்வையாளர்கள் ஒரு இருக்கை இடைவெளி விட்டு அமர வேண்டும் . பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட உணவுப்பொருட்களை மட்டுமே விற்க வேண்டும். ஆன்லைன் டிக்கெட் விற்பனையை ஊக்குவிக்க வேண்டும்” உள்பட பல நிபந்தனைகள் தெரிவிக்கப்பட்டுள்ளது.