அருவி பட நடிகை அதிதிபாலனுக்கு அபராதம் விதித்த மருத்துவத்துறை!

அருவி படத்தின் மூலம் ஒட்டு மொத்த தமிழ்த்திரையுலகினரை தன் பக்கம் ஈர்த்தவர் நடிகை அதிதி பாலன்.இன்று அவர் கொடைக்கானலில் காரில் முகக்கவசமின்றி சென்றார்.இதைப்பார்த்த மருத்துவத்துறையினர் அதிதி பாலனுக்கு அபராதம் விதித்தனர். இதை ஏற்காமல் அங்கிருந்த மருத்துவ துறையினரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார்.மேலும் தன்னை ஒரு வழக்கறிஞர் என்றும்,காவல் நிலையத்துக்கு வருமாறும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார்.இதன் காரணமாக அங்கு சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.