மலையாளப் படங்களில் ‘அவமானப்படுத்துகிறார்கள்’, இனிமேல் அங்கு ‘பாட’ மாட்டேன்! -விஜய்யேசுதாஸ் அதிரடி முடிவு!!
பின்னணிப்பாடகர் கே.ஜே யேசுதாஸ். இவரது வாரிசு விஜய் யேசுதாசும் பின்னணிப் பாடகர் தான் தான். .தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி எனப் பல மொழிகளில் சுமார் 300-க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ள இவர் மலையாளத்தில் 3 முறை சிறந்த பாடகருக்கான மாநில அரசின் விருதும், 5 முறை பிலிம்பேர் விருதுகளும், நந்தி விருதும் பெற்றுள்ளார்.
தனுஷின் மாரி படத்தின் மூலம் வில்லனாகவும் அறிமுகமான இவர், படைவீரன் என்ற படத்தில் ஹீரோவாகவும் நடித்துள்ளார் . தற்போது2 புதிய படங்களிலும் நடித்தும் வருகிறார்.இந்நிலையில் விஜய்யேசுதாஸ் மலையாள படங்களில் இனிமேல் பாடப்போவதில்லை என்ற அதிரடி முடிவை எடுத்துள்ளாராம்.
இது குறித்து விஜய் யேசுதாஸ் கூறியுள்ளதாவது, ‘மலையாள சினிமாவில் இசையமைப்பாளர்களுக்கும், பின்னணி பாடகர்களுக்கும் உரிய மரியாதை கிடைப்பதில்லை. அதனால் மலையாள சினிமாவில் இனி பாடப் போவதில்லை என முடிவு செய்து இருக்கிறேன்.மலையாள சினிமாவில் பலமுறை பலரிடம் அவமானப்பட்டுள்ளேன். இனியும் அந்த அவமானங்களைத் தாங்க முடியாது என்பதால் இந்த முடிவை எடுத்திருக்கிறேன் . தமிழ், தெலுங்கு மொழிகளில் தனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. அங்குப் பாடகர்களுக்கு மரியாதை கொடுக்கின்றனர்,எனவே தமிழ், தெலுங்கு மொழிகளில் தொடர்ந்து பாடுவேன் என்று கூறியுள்ளார்.இது மலையாளத் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.