கிஸ் பண்ண யோசிக்கமாட்டாய்ங்களா ?

“என்னெவென்று சொல்வதம்மா கன்னி அவள் பேரழகை “என்று காய்ந்து போன சருகெல்லாம் அவளை பார்த்ததும் பசுமையாகத் தொடங்கிவிடும் !
அடடா… அவள் மாரழகென்னா .கன்னக்கதுப்பின் செழிப்பென்ன,செக்கச்செவந்த இதழ்களின் செழுமையென்ன ,தொடையழகின் வனப்பென்ன ….இப்படி மாய்ந்து போவார்கள் டெமிமூரின் ரசிகர்கள்.
அந்த அளவுக்கு அவளது இளமை பூரித்து நிற்கும்.
அவருக்கு ஒரு விசித்திரமான பழக்கம்.
அட்டைப்பூச்சியை உடம்பில் விட்டுக்கொள்வார் .!
அட கடவுளே அந்த பூச்சியாக நாம் இருந்துவிடக்கூடாதா என்று யாரோ முனகும் சத்தம் கேட்கிறதே!
அமெரிக்கப்பாடகி கேஷா .இந்தியாவில் பிறந்திருக்க வேண்டியவர் .அதிலும் குஜராத்தில் பிறந்து பாரதிய ஜனதாவில் இருந்திருக்க வேண்டிய பெண்.அந்நிய மண்ணில் பிறந்து விட்டார்.
என்னய்யா புலம்பல் என்கிறீர்களா?
அந்த பாடகி தன்னுடைய சிறுநீரை குடிக்கும் பழக்கம் உள்ளவர். இப்போது சொல்லுங்கள் ,நான் புலம்பினேனா?
இன்னொரு அமெரிக்கப்பாடகி ஜெசிகா சிம்ப்சன். ஆள் ஜம்முனு இருப்பார்.
பொதுவாக வெள்ளையர்கள் டாய்லட்டில் காகிதம்தான் யூஸ் பண்ணுவார்கள். தண்ணீரை அவ்வளவாக பயன்படுத்த மாட்டார்கள் .ஆனால் பல் தேய்ப்பதில் மட்டும் ரொம்பவும் கவனமாக இருப்பார்கள் என்று சொல்வார்கள்.
ஆனால் இந்த ஜெசிகா பல்லே தேய்க்கமாட்டாராம் .அடிக்கடி மவுத் பிரஷ்னர் போட்டுக் கொள்வார் என்கிறார்கள். அப்படின்னா ‘கிஸ் ‘பண்றதுக்கு யோசிக்கமாட்டாய்ங்களா?