தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகும் ‘கிக் பாக்ஸிங்’ சாம்பியன்!
ஜாகுவார் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் ஸ்ரீகாந்த், ராய் லட்சுமி , தேவ் கில், வைஷ்ணவி சந்திரன் மேனன், பிளாக் பாண்டி…ஆகியோர் நடிக்கும் மிருகா திரைப்படத்தில் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக அறிமுகமாகிறார்மும்பையில் பிறந்து வளர்ந்த நாய்ரா ஷா.இவர் குங்-ஃபூ கற்றவர்.தேசிய அளவிலான கிக் பாக்ஸிங் சாம்பியன்ஷிப்பில் வெள்ளிப் பதக்கமும் வென்றவர்.
தெலுங்குப் படங்களில் நடித்து வந்த இவர் தமிழில் மிருகா படத்தின் மூலம் இளமையும், குறும்பும் பொங்கும் தன் அழகால் ரசிகர்களை அவர் வசம் இழுக்கப் போவது உறுதி. புலியிடமிருந்து தன் சகோதரி மகளைக் காப்பாற்றப் போராடும் காட்சி… நாய்ரா ஷாவின் நடிப்புத் திறமைக்கு சாட்சி…
எவ்வளவு ஆபத்தான காட்சியிலும் நாய்ரா ஷா டூப் போடாமல் துணிச்சலாக நடித்தார். பத்தடி உயரத்தில் இருந்து வெறும் தரையில் குதித்தார். கால் தடுமாறி மாடிப்படிகளில் உருளும் காட்சியில் படத்தொகுப்புக்காக வெவ்வேறு கோணங்களில் பல ஷாட்கள் எடுக்கப்பட்டன. சிறிதும் முகம் சுளிக்காமல் தன் வலியை மறைத்தபடி நாய்ரா பலமுறை படிகளில் உருண்டது வியப்புக்குரிய விஷயம் என்கிறார் இப்படத்தின் இயக்குனர் ஜெ.பார்த்திபன்.