மாலத்தீவில் தேனிலவு கொண்டாடிய காஜல்அகர்வால் !
நடிகை காஜல் அகர்வால் – தொழில் அதிபர் கவுதம் திருமணம் மும்பையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் சமீபத்தில் நடந்து முடிந்தது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக திருமணத்துக்கு இரு வீட்டாரின் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் என மொத்தம் 50 பேர் மட்டுமே அழைக்கப்பட்டிருந்தனர்.
திருமணத்திற்கு பிறகும் கண்டிப்பாக நடிப்பேன் என கூறியுள்ள காஜல் தற்போது, கமல்ஹாசனுடன் ‘இந்தியன்-2 ’ சிரஞ்சீவியுடன் ‘ஆச்சார்யா’’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.கொரோனாஊரடங்கு காரணமாக ‘ஆச்சார்யா’ படத்தின் ஷுட்டிங், பல மாதங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால், ஆச்சார்யா ஷுட்டிங்கை மீண்டும் நடத்த சிரஞ்சீவி முடிவு செய்துள்ளார் என்றும்,.இம்மாதம் படப்பிடிப்பு தொடங்கப்பட உள்ளது என்றும் தகவல்கள் வெளியாகின..
இதற்காக தனது தேனிலவை கூட காஜல் காஜல் அகர்வால், தனது ஹனிமூனை கூட தள்ளிவைத்துள்ளார். கல்யாணம் முடிந்த கையோடு 15 நாள் ஓய்வில் இருக்கும் காஜல், அதன் பின் ‘ஆச்சார்யா’ படத்துக்கு கால்ஷீட் கொடுத்துள்ளார் என கூறப்பட்டு வந்தது.
இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் கணவர் கவுதமுடன், காஜல் அகர்வால் மாலத்தீவில் உள்ள ரங்காலி தீவு ரிஸார்ட்டுக்கு ஹனிமூன் சென்றுள்ளது அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து வெளியான புகைப்படங்களின் மூலம் இருந்து தெரிய வந்துள்ளது.இப் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.காஜல் தனது ஹனிமூனை ஆச்சார்யா படத்துக்காக தள்ளி வைத்திருப்பதாக வெளியான செய்தியை அறிந்த சிரஞ்சீவி, காஜலை போனில் அழைத்து, உடனடியாக தேனிலவுக்கு செல்லுமாறும், அதன் பிறகு படப்பிடிப்பில் கலந்து கொண்டால் போதும் என அறிவுறித்தியதாலேயே இந்த திடீர் தேனிலவுப்பயணம் என்கிறது காஜலுக்கு நெருக்கமான தரப்பு.