நடிகை தேஜஸ்வியின் பகிரங்க ‘பாலியல் ‘குற்றச்சாட்டு! !

சினிமா நடிகைகள் என்றால் எந்த அளவுக்கு மரியாதை இருக்கிறதோ ,அதற்கு சற்றும் குறையாமல் சாதாரண மக்களிடம் நேர் எதிரான கருத்தும் இருக்கிறது.
அதற்கு மீ டூ போன்ற பதிவுகளும் ,சில நடிகைகளின் வெளிப்படையான பேச்சுகளும் காரணம்.
இதனால் எல்லா நடிகைகளும் அப்படித்தான் இருப்பார்களோ என்கிற எண்ணம் மக்களுக்கு ஏற்பட்டுவிடுகிறது.
தேஜஸ்வி என்கிற தெலுங்கு நடிகை ‘கமிட்மென்ட் ‘என்கிற ஆந்தாலஜி படத்தில் நடித்திருக்கிறார்.
“அந்த டைட்டிலுக்கு தெலுங்கு பட உலகில் என்ன அர்த்தம் தெரியுமா?
“பாலியல் ரீதியான சலுகைகுத் தான் அந்த ‘கமிட்மெண்டை’ சங்கேத வார்த்தையாக பயன்படுத்துகிறார்கள்.”என்கிறார் தேஜஸ்வி.
இன்னும் என்ன சொல்லியிருக்கிறார்?
“வடஇந்திய நடிகைகளிடம் அவர்களது மானேஜர் வழியாக ‘அது ‘சாத்தியமாகிறது. தெலுங்கு நடிகைகளிடம் பயமில்லாமல் அதை பற்றி கேட்கிறார்கள்” என்கிறார் .கமிட்மென்ட் படத்தின் கதையும் அதைத்தான் சொல்கிறதாம்.
இதுவரை தேஜஸ்வி கருத்துக்கு பதிலேதும் இல்லை.