வெங்கட் பிரபு இயக்கத்தில்,சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘மாநாடு’. இந்தப் படத்தில் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், இயக்குனர்கள் பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா, மற்றும் ஒய்.ஜி.மகேந்திரன், டேனியல் பாலாஜி, மனோஜ், பிரேம்ஜி, உதயா, அரவிந்த் ஆகாஷ், படவா கோபி, அஞ்சனா கீர்த்தி மற்றும் பலர் நடித்து வருகின்றனர்.ஏற்கனவே சென்னை, ஐதராபாத் ஆகிய இடங்களில் இரண்டு கட்டமாக இதன் படப்பிடிப்பு நடத்தி முடிக்கப்பட்ட நிலையில், கடந்த நவம்பர் 9-ம் தேதியிலிருந்து பாண்டிச்சேரியில் தொடங்கிய ‘மாநாடு’ படப்பிடிப்பில் சிம்பு கலந்து கொண்டு நடித்து வருகிறார். சமீபத்தில் இப்படத்தின் பர்ஸ்ட்லுக் வெளியாகியிருந்தது. அப்துல் காலிக்காக நடிக்கும் எஸ்.டிஆரின் புதிய தோற்றம், உடல் எடை, படப்பிடிப்பிற்கு சரியாக வர மாட்டார் என இதுநாள் வரை அவரை விமர்சித்தவர்களை அது வாயடைக்க செய்து விட்டது இதுவரை இப்படத்தின் 2 போஸ்டர்கள் வெளியாகியுள்ள நிலையில்,இப் படத்தில் சிம்பு இரண்டு வேடத்தில் நடிக்கிறார் என பேச்சுகள் வர ஆரம்பித்தன. ஆனால் தயாரிப்பாளர் தரப்போ இதை மறுத்துள்ளனர். படத்தில் ஒரே ஒரு வேடம் தான் என்றும் அதுவே மாஸாக இருக்கும் என்கின்றனர்.