நடிகர் ரஜினிகாந்த் தனது உடல் நிலையை சுட்டிக்காட்டி இன்று காலை அதிகாரபூர்வமாகஅரசியலுக்கு வரப்போவதில்லை என திட்டவட்டமாக அறிக்கையின் மூலம் அறிவித்துவிட்டார் ரஜினி. இதற்காக அவர் ரசிகர்களிடமும் தமிழக மக்களிடமும் மன்னிப்பு கோரியுள்ளார்.
ரஜினியின் இந்த முடிவுக்குஅரசியல் வாதிகள் திரையுல பிரபலங்கள் என பலரும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.இந்நிலையில் தற்போது ரஜினியின் முடிவு குறித்து பிரபல ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான விஜய் மில்டன் தனது ட்விட்டர் பதிவில் ரஜினிக்கு வேண்டுகோள் விடுத்து ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
“தைரியமான முடிவு ரஜினிகாந்த் சார். உங்கள் நிலைப்பாடு என்னவாக இருந்தாலும் நாங்கள் ஆதரிக்கிறோம். ஆனால், ஒரே ஒரு வேண்டுகோள். உண்மையில் நீங்கள் இங்கொரு மாற்றத்தை விரும்பினால் உங்கள் ஆதரவை வெளிப்படையாக மக்கள் நீதி மய்யத்துக்கு அறிவியுங்கள்”.என விஜய் மில்டன் தெரிவித்துள்ளார்.