தமிழ்த்திரையுலகில் பிரமாண்ட படத் தயாரிப்பாளர் என பெயரெடுத்தவர் கலைப்புலி எஸ்.தாணு .திரையுலகில் கடந்த 50 ஆண்டுகளாக வெற்றிப்படத்தயாரிப்பாளராக வலம் வரும் அவருக்கு திரையுலகினர் பலரும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், பழம்பெரும் தயாரிப்பாளர்கள்.எஸ்.எஸ்.வாசன், நாகிரெட்டி, உள்ளிட்டோர் வகித்து வந்த பெருமைக்குரிய அகில இந்திய திரைப்பட கூட்டமைப்பின் 71வது தலைவராக கலைப்புலி எஸ். தாணு ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.இதையடுத்து வரும் 2021 புத்தாண்டில் ஜனவரி 1 ம் தேதி அன்று அகில இந்திய திரைப்பட கூட்டமைப்பின் 71வது தலைவராக கலைப்புலி எஸ். தாணு பதவியேற்கிறார். அகில இந்திய திரைப்பட கூட்டமைப்பின் துணை தலைவர்களாக சி.கல்யாண்,சி.பி.விஜயகுமார்,என்.எம். சுரேஷ், ஆனந்தா எல்.சுரேஷ், டி.பி.அகர்வால், ஆகியோரும் , செயலாளர்களாக ரவி கொட்டாரக்காரா, ஹரிசந்த் ஆகியோரும் பதவி ஏற்க உள்ளனர். இந்நிலையில் அகில இந்திய திரைப்பட கூட்டமைப்பின் புதிய தலைவர் கலைப்புலி எஸ்.தாணுவுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது