தென்றலே என்னை தொடு திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான நடிகை ஜெயஸ்ரீ தமிழ்த்திரையுலகில் 80 களில் கொடிகட்டி பறந்தவர். திருமணமாகி நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டு,கணவர்,குழந்தைகள் என அமெரிக்காவில் செட்டிலானார்.
இந்நிலையில்,சமீ
இந்நிலையில் இவ்விவகாரம் குறித்து நடிகை ஜெயஸ்ரீ கூறுகையில்” அமெரிக்க அரசு காப்பகத்தில் தன்னார்வலராக பணியாற்றி தங்களின் சமூக கடமைகளை நிலை நிறுத்தி வருகின்றனர். அந்த வகையில் நடிகை ஜெயஸ்ரீயும் அங்கு தன்னார்வலராக சேவை செய்து வருவதாகவும், மேலும்,அமெரிக்காவை பொறுத்தவரை ஆதரவற்றவர்களுக்கு என காப்பகங்கள் இருக்கின்றன.
அங்கே தன்னார்வலராக நாமும் சென்று, உணவு சமைத்து பரிமாறலாம். ஸ்டார் ஹோட்டல்களுக்கு இணையான உணவுகளை சமைத்துக் கொடுத்து அவர்களை மகிழ்விக்க அங்கே அனுமதி தரப்படுகிறது.
வார விடுமுறை நாட்களில் அரசு காப்பகங்களுக்கு செல்வேன் .அங்கு அவர்கள் கொடுக்கும் பொருள்களை கொண்டு உணவுகளை உயர் ரகமாக சமைத்து கொடுத்து விட்டு அன்போடு பரிமாறுவது வழக்கம். நமது சமூகத்தில் நம்முடன் வாழும் மற்றவர்களும் சமம்தான். யாருக்குள்ளும் எந்த ஏற்ற தாழ்வோ பாகுபாடோ இல்லை. என்னுடன் உதவிக்கு எனது மகனும் அவ்வப்போது வருகிறான் என்கிறார் நெகிழ்வுடன் நடிகை ஜெயஸ்ரீ.