தமிழில் நயன்தாரா,யோகிபாபு நடிப்[பில் வெளியான ‘கோலமாவு கோகிலா’ படத்தின் இந்தி ரீமேக்கில் நயன்தாரா கதாபாத்திரத்தில் மறைந்த நடிகை .ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடித்து வருகிறார்., குட் லக் ஜெர்ரி.என பெயரிடப்பட்ட இப்பட த்தை இயக்குநர் ஆனந்த் எல்.ராய் தயாரிப்பில், சித்தார்த் சென்குப்தா இயக்கி வருகிறார்., பஞ்சாப்பில் இதன் படப்பிடிப்பு தொடங்கி தொடர்ந்து நடந்து வருகிறது. பாஸி பதானா நகரில் இதன் படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில் திடீர் என அங்கு வந்த விவசாயிகள், மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் டெல்லியில் ஒரு மாதத்துக்கும் மேலாக போராடி வருகிறார்கள். இந்தப் போராட்டத்தை இந்தி திரையுல கினர் கண்டுகொள்ளவில்லை.என குற்றம் சாட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இதையடுத்து அங்கு வந்த இயக்குனர் சித்தார்த் சென்குப்தா,விவசாயிகளுக்கு ஆதரவாக உடனடியாக நடிகை ஜான்வி கபூர் அறிக்கை வெளியிடுவார் என சமாதானம் செய்தார். இதையடுத்து விவசாயிகள் கலைந்து சென்றனர்.இதையடுத்து,ஜான்வி கபூரும், தனது சமூக வலைதளப க்கத்தில்,விவசாயிகளுக்கு ஆதராக,” விவசாயம்தான் நம் நாட்டின் இதயம். நமது தேசத்துக்கு உணவளிக்கும் அவர்கள் பங்கை நான் அங்கீகரிக்கிறேன், மதிக்கிறேன். அவர்கள் ஆதாயமடையும் வகையிலான தீர்மானம் அவர்களுக்கு கிடைக்கும் என நம்புகிறேன் என்று பதிவிட்டு இருந்தார்.இந்நிலையில் இப்படத்தின்படப்பிடிப்பு பாட்டியாலாவில் உள்ள பூபிந்தரா சாலையில் நடந்து கொண்டிருந்தது.அப்போது அங்கு திடீரென்று கூடிய விவசாயிகள் படக்குழுவுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டதோடு, ஜான்வி கபூரே திரும்பிச் செல் என்று கோஷமிட்டனர்.இதையடுத்து அங்கு பெரும் பதட்டம் ஏற்பட்டு மோதல் ஏற்படும் சூழல் உருவானது.உடனடியாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு ஜான்வி கபூர் உட்பட படக்குழுவினர் அங்கிருந்து வெளியேறினர்.