“என்னப்பா இது? நாங்களே அந்தம்மாவை பத்தின நினைவு இல்லாம இருக்கணும்னு படாதபாடு பட்டுக்கிட்டு இருக்கோம். கடந்த நாலு வருசமாதான் கூனு விழாம நிமிந்து பாத்துக்கிட்டிருக்கோம் . நீ உம்பாட்டுக்கு இப்படி போஸ்டர் அடிச்சா என்னப்பா அர்த்தம்?” என்கிற மைண்ட் வாய்ஸில் அந்த போஸ்டரை இபிஎஸ்சும் ,ஓபிஎஸ்சும் பாத்திருப்பாங்க போலிருக்கு!
அடிவயத்திலேர்ந்து கிளம்பின அக்கினி கபாலத்தை பொசுக்கிருச்சு.!
“யாருய்யா அந்த போஸ்டர போட்டது, தூக்குய்யா கச்சிய விட்டு !” போட்ட சத்தம் ஜெயலலிதா நினைவாலயம் வரை கேட்டிருக்கும்.!
அப்பறம் என்ன?
கட்டம் கட்டியாச்சு,!
எம்.ஜி.ஆர். மக்கள் மன்ற திருநெல்வேலி மாவட்ட இணைச் செயலாளரா இருந்தவர் சுப்பிரமணிய ராஜா .
இவர் சசிகலா விடுதலையானதை வரவேற்று பெரிய போஸ்டர் போட்டிருந்தார்.
அதில் அண்ணா ,எம்.ஜி.ஆர் ,ஜெயலலிதா ,உள்ளிட்ட மறைந்த தலைவர்களுடன் இபிஎஸ் ,ஓபிஎஸ் ஆகியோரின் படங்களும் இருந்தன.
“அ .இ.அ .திமுகவை வழி நடத்தவரும் பொதுச்செயலாளர் அவர்களே !வருக,வாழ்க ,வெல்க” என்று சசிகலாவை வரவேற்று இருந்தார்.
பொசுக்குன்னு தூக்கிட்டாய்ங்க!