சித் ஸ்ரீராம் வளர்ந்து வருகிற பின்னணிப்பாடகர்.
தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் தற்போது பிசியாகி விட்டார்.
வளர்ச்சி நல்லதுதானே!
வெயில் அடிக்கிறபோதே சட்டையை துவைச்சு காயப்போடுறது புத்திசாலித்தனம்தான்.! என்றாலும் துணியே கிழிகிற அளவுக்கு துவைக்கக்கூடாது அல்லவா!
தற்போது தெலுங்கு திரை உலகமே இவரது சம்பளத்தைப்பார்த்து ஆடிப்போய் கிடக்கிறது.
பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியமே ஒரு பாட்டுக்கு வாங்கிய உயர்ந்த பட்ச சம்பளம் 2 லட்சம்தான்.!
ஆனால் சித் ஸ்ரீராம் கேட்கிற சம்பளமோ …?
ஒரு பாட்டுக்கு அவர் கேட்கிற சம்பளம் 6.5 லட்சம் ப்ளஸ் ஜி.எஸ்.டி வரி.! சென்னையிலிருந்து ஹைதராபாத் வந்து போக விமான கட்டணம்.
அட தேவுடா என்று வாயைப்பிளக்கிறது ஆந்திர திரை உலகம்.!
சாம்பார் வெங்காயம் விக்கிற விலைக்கு இதுவே சின்ன சம்பளம்தான் என்று சித் ஸ்ரீராம் சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.